தஞ்சையைச் சேர்ந்த ஆர்.மணிவண்ணன், ஓவியர் மற்றும் தொழில்முறை புகைப்படக்காரர். நுண்கலைகளில் பட்டம் பெற்றவரான இவர், புகழ்பெற்ற கோயில்கள்,மற்றும் கலைகளால் நான் இளம் வயதிலேயே மிகவும் ஈர்க்கப்பட்டதாகச் சொல்கிறார். நாட்டின் பாரம்பரியம், மாறுபட்ட கலைகள், கட்டடக்கலைகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை தன் காமிராவில் பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளார். கும்பமேளா, போண்டா பழங்குடியினர், நாகலாந்து ஹார்ன்பில் திருவிழா, கேரளத்தின் தெய்யம், புஷ்கர் ஒட்டகத் திருவிழா போன்றவற்றைப் படம்பிடித்துள்ளார்.
புகைப்படமும் ஓவியமும் இரு கண்களைப் போன்றவை எனச் சொல்லும் மணிவண்ணனின் புகைப்படங்கள் இந்த இதழில்..
பிப்ரவரி, 2022